எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---15  ஒரு பார்வை.

                 - லக்கி ஷாஜஹான்

எழுத்துக்கூடத்தின் பதினைந்தாம் கூட்ட சந்திப்பு

- ஒரு பார்வை.

லக்கி ஷாஜஹான்

.

* * *

கடந்த வெள்ளிக்கிழமை

(01-09-2006) மேதகு இந்திய தூதர் ஐயா வீட்டில் நடந்த மூன்று நிகழ்வுகள் முக்கியமானவை. ரியாத் தமிழ் சங்கத்தின் ஐந்து அமைப்புகளில் ஒன்றான திறனாய்வுக் கூடம் துவக்கப்பட்டது, இருபதாண்டு காலம் சௌதி அரேபிய தலை நகர் ரியாத்தில் மருத்துவராகவும் தமிழ் சங்க முன்னோடி அமைப்புகளில் ஒன்றான தமிழ் கலாச்சார கழகத்தின் அதி முக்கிய அமைப்பாளராகவும் இருந்து தமிழ் சமுதாயப் பணிகள் செய்து வந்துவருமான டாக்டர் ஐயா சோமு அவர்களுக்கு பிரிவு உபச்சார நிகழ்வு நடைபெற்றது மற்றொன்று. மூன்றாவதாய் வழக்கம்போலவே சீரும் சிறப்புமாய் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் எழுத்துக்கூட சந்திப்பு .

சௌதியில் குஞ்சு குளுவான் எல்லாம் வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கும் போது

( குஞ்சு குளுவான் = சௌதி அரை டிராயர் டிக்கெட்டுகள் ) இன்னும் நான் மட்டும் இரண்டு சக்கரம் கூட ஒழுங்காய் கற்றுக் கொண்டிராத காரணத்தால் எப்போதும் இன்னொருவரையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் மூன்று மணிக்கெல்லாம் கிளம்பி இருந்து ( வெள்ளை வேஷ்டி - வெள்ளைச் சட்டையில் அழகாய்.. ( : )) ) புது மாப்பிள்ளை போல் ( நன்றி: திருமதி விஜிமா ) அனேகமாய் அன்றைய எழுத்துக்கூடத்தின் சந்திப்புக்கு தாமதமாய் போன கடைசி ஆள் நானாகத்தான் இருந்திருக்க வேண்டும் .ஷாஜி, எங்கே இருக்கீங்க இன்னும் வரலை.. என்ற நண்பர் சுபைரின் அழைப்பின் போது டாக்ஸியை விரட்ட சொல்லி உங்களுக்காகத்தான் வெயிட்டிங் என்ற நண்பர் ராஜாவின் அழைப்பின்போது தூதர பாதுகாப்பு அதிகாரிகளிடம் விளக்கி உள்ளே நுழைந்த போது ( நேற்றைய மெகா சீரியலில் ஆழ்ந்து போனதின் விளைவு - இந்த பில்டப் ) மணி நான்கைத் தொட்டு விட்டிருந்தது .

ஐயா ஜெயசீலன்

,ஐயா மாசிலாமணி, ஐயா வெற்றிவேல் ,திருமதி மாசிலாமணி,நண்பர்கள் கல்யாண் , கே.வி. ராஜா,அஹமது சுபைர், அப்பாஸ் ஷாஜஹான்,அஹமது இம்தியாஸ்,முஹமது ஷெரீஃப் ,ராசப்பா, ஜாஃபர் சாதிக் ,சிக்கந்தர் மற்றும் இன்னொரு புதுமுகம் - தொடர்ந்து அடுத்தடுத்த எழுத்துக்கூடத்துக்கு வருகை தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஐயா திரு முரளிதரன் புதிதாக இந்திய தூதரகத்தில் பணியாற்றிட வந்திருப்பவர்- தாயகத்தில் திருச்சியை சேர்ந்த தமிழர் இவர்களுடன் அடியேனும் கலந்து கொள்ள கர்ஜனை குரலோன் அஹமது சுபைர் ( ஏம்பா வாரா வாரம் ஒரு பட்டம் தாரேனே.. அண்ணனுக்கு ஏதும் ராயல்( டீ)டி கிடையாதா.. ? ) இந்த வார கதாவிலாச பதிவையும் - எழுத்தாளர் அறிமுகத்தையும் படிக்கத் துவங்க எழுத்துக்கூடம் கலகலவென களைகட்டத் தொடங்கியது .

* * *

பெற்றோர்களுக்குத் தெரியாமல் நண்பர்கள் துணையுடன் திருமணம் செய்து கொள்ளும் காதலர்களின் உள்ளத்து வேதனையை குறிப்பாய் அந்த மணப்பெண்ணின் தாலி கட்டும் வரையிலான அவஸ்தையை விவரிக்கும் எஸ்

.ராவின் அனுபவ விவரிப்புடனே ' கரிசலின் இருள்கள்' என்ற சிறுகதை வாயிலாக பா. செயப்பிரகசம் என்ற இலக்கிய எழுத்தாளரைப் பற்றிய அறிமுகத்தை படிக்கத் துவங்கினார் சுபைர்.

முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள்

,கட்டுரைகள் எழுதி வரும் தீவிர இலக்கிய எழுத்தாளரான பா .செயப்பிரகாசத்தின் எழுத்துக்கள் சமூக விடுதலையை நோக்கி அமைந்தவை. இதுவரை கதை உலகின் காலடி படாத கிராமத்தின் ஒடுக்கப்பட்ட மக்களையும் அவர்களின் வாழ்க்கைப் பாடுகளையும் விவரிக்க கூடிய எழுத்துக்கள் பா .செயப்பிரகாசத்தின் தனித்தன்மை என பாராட்டுகிறார் எஸ். ரா.கரிசல் கதைகளின் உலகில் தனித்துவம் பெற்றவரான பா. செயப்பிரகாசத்தின் "ஒரு கிராமத்து ராத்திரிகள் " என்ற தொகுப்பு தமிழ் சிறுகதை உலகில் குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.

இவரது சிறுகதைகளில் இவ்வார கதாவிலாசத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட

"கரிசலின் இருள்கள் " என்ற சிறுகதை ஒரே நாளில் திருமணமான ஒரு பெரிய வீட்டு மணமக்களையும் - சாதாரண மணமக்களையும் கருப்பொருளாய் எடுத்துக் கொண்டு கல்யாணத்தன்றே அந்த உயர்ந்த சாதி -அந்த பெரிய வீட்டு திருமணத்துக்கு கூத்துக் கட்ட சாதாரண மணமகன் அழைக்கப்பட அவன் மனைவி தடுக்க ஊர்க்கட்டுப்பாட்டுக்கு பயந்து அவன் செல்ல தங்களுக்கும் அன்றுதான் திருமணமாகி முதல் இரவு என அவன் மனைவி வேதனையோடு இருளில் அமர்வதாய் கதை முடிகிறது

திருமணம் பற்றிய கனவும்

- கனவு பற்றிய எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்போது ஏற்படும் மன நிலையும் எஸ்.ராவின் கைவண்ணத்தில் பட்டம் பறக்கும் உவமையோடு அழகாய் விரிகிறது .ஒரு பட்டம் எந்தத் திசையில் திரும்பப் போகிறது, எவ்வளவு உயரம் பறக்கப் போகிறது, எப்போது அறுபடப் போகிறது என்று யாருக்குமே தெரியாது . ஆனாலும், பட்டத்தின் கயிறு நம்மிடம்தான் இருக்கிறது . அதை நாம்தான் இயக்குகிறோம்.ஒரே ஆகாயத்தில்தான் எல்லா பட்டங்களும் பறக்கின்றன . ஆனால், ஒவ்வொரு பட்டமும் ஒரு உயரமும் , ஒரு பறத்தலும் கொண்டு இருக்கிறது. இப்படித்தான் இருக்கிறது நம் திருமணக் கனவுகளும் என்ற எஸ்.ராவின் வரிகளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை .

நூற்றாண்டுகள் பல கடந்து விட்ட போதும் காதல் திருமண விஷயத்தில் படித்தவர்கள் கூட குகை மனிதனின் மனநிலையில் தான் இருக்கிறார்கள்

.எல்லாத் திருமண கொண்டாட்டங்களுக்குப் பின்னும் வெளிப்படுத்த முடியாத கண்ணுக்குத் தெரியாத ரணங்களும் வலிகளும் இருக்கத்தான் செய்கின்றன என்ற எஸ் .ராவின் எண்ண ஓட்டத்தைப் படித்த போது சில ஆண்டுகளுக்கு முன்னால் விகடனில் வெளிவந்த ஒரு முத்திரை கவிதை மனசுக்குள் வந்து போனது. சின்ன வரிகளுக்குள் அடங்கிவிட்ட

பெரிய சோகம் கவிதை வடிவில் இதோ

...
ஓங்கி ஒலிக்கும்
கெட்டிமேளச் சத்தத்தில்
அடங்கிப் போகின்றன
சில விசும்பல்கள்
ஏதோ ஒரு
திருமணத்திலேனும்
...

எழுத்துக்கூட நிகழ்வில் நண்பர்களால் விவாதிக்கப்பட்ட கதாவிலாசம் பற்றிய

பின் நிகழ்வுகள்

>

கதாவிலாசத்தில் இருந்த புதிய வார்த்தைகள் மற்றும் அதில் பயன்படுத்தப்பட்ட இப்போது புழக்கத்தில் இல்லாத வார்த்தைகள் பற்றி நல்ல அலசல் நடைபெற்றது. திரு இம்தியாஸ் அவர்கள் பல்வேறு சொற்றொடர்களை பதிவிலிருந்து மேற்கோள் கொடுத்து கேட்க , தெரிந்த மற்ற நண்பர்கள் அதற்கு விளக்கமளித்தார்கள் .இது சமீப காலமாய் எழுத்துக்கூடத்தில் அதிகமாயிருக்கிறது.பயனுள்ள விஷயம் .
> "
பனங்காட்டு காடை " என்ற ஒரே ஒரு சொற்பிரயோகத்தை வைத்து பனைமரங்கள் மட்டுமே உள்ள
கரிசல் பிரதேசம் என்ற வர்ணிப்பை வெற்றிவேல் ஐயா விளக்கினார்கள்.இது போன்று குலவை சத்தம் , நாதஸ்வரமா,நாகஸ்வரமா , இளவட்ட வெற்றிலை, மொய் விருந்து, ஊர் விருந்து போன்ற பல வார்த்தைப் பிரயோகங்கள் சுவையாக அலசப்பட்டன.மொய் விருந்து என்பது ஒரு Mutual Funds System போலத்தான் என்று விளக்கமளித்தார்கள் மாசிலாமணி ஐயா.

> பதிவின் துவக்கத்தில் சாதாரணமாய் சொல்லிவிட்டுப் போகும் ஒரு கதாபாத்திரப் படைப்பை பின் படைப்பின் நடுவில்/ முடிவில் எஸ்.ரா எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்ற நுணுக்கமும் ஆராயப்பட்டது. இந்த நடை புதிதாய் சிறுகதை எழுதுபவர்களுக்கு நிச்சயம் உதவக் கூடும்.

> ஓடிப் போய் கல்யாணம் செய்துகொள்பவர்களின் இன்னொரு பக்கத்தை உண்மையாய் காட்டிய காதல் திரைப்படம் இந்த வார கதாவிலாசத்துக்கு தொடர்புடையாக இருப்பதால் அதுபற்றியும் சிலாகிக்கப்பட்டது . (சினிமாவை எந்த இடத்திலும் தவிர்க்கமுடியவில்லை. தேவையான தீமை..? )

> கதாவிலாச முன்னுரையில் வரும் மணமகள் பாடும், காதல் சிறகை காற்றில் விரித்து பாடலின் சிறந்த வரிகளை திருமதி விஜிமா பாடிக்காட்டினார்கள். அவர் விட்டுப் போன வரியை திரு .அஹமது இம்தியாஸ் சொல்ல எழுத்துக்கூடத்திலுள்ள ரசனையாளர்கள் பற்றிய ரகசிய பட்டியல் வெளியாகத் தொடங்கி விட்டது.

> பதிவுத் திருமணம் செய்து கொள்ள வரும் எல்லா பெண்களின் மூஞ்சும் பயத்தில் வெளிறிப் போய் வெளிர்மூஞ்சாய்தான் இருந்து பார்த்திருக்கிறேன் என்பதை டங் (Tung) ஸ்லிப்பானதில் விடியாமூஞ்சியாய் என்று அடியேன் சொல்லப் போக திரு முரளிதரன் குறுக்கிட்டு விளக்கம் கேட்டு விளாசிவிட்டார். நல்லவேளை ஐயா மாசிலாமணி குறுக்கிட்டு என் டிஸ்ட்ராக்ஸன் நிலையை தெளிவுபடுத்தினார்.

அடியேன் இரண்டு காதல் திருமணத்திற்கு உதவி செய்து

,உதைபட்டு, உடை கிழிந்து பதிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டு அந்த பெற்றோர்களின் சாபத்தை சம்பாதித்தாலோ என்னவோ எனக்கு மட்டும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகிவிட்டது என்ற உண்மையை எழுத்துக்கூடத்தில் சொல்ல வருவதற்குள் கூட்டம் நிறைவு பெற்று விட்டது.ஒரு தியாகியின் வீர தீர வரலாற்றை எழுத்துக்கூடம் கேட்க முடியவில்லையே என்ற கவலையை அடுத்து நடைபெற்ற இரண்டு நிகழ்வுகளும் அதற்கப்பால் இந்திய தூதரக கலையரங்கில் திரையிடப்பட்ட வசூல் ராஜா M.B.B.S லிருந்து ஒளிப்பரப்பப்பட்ட சீனா தானா பாடலும் மறக்கடித்து விட்டது.
=================================================


 
 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

. தங்கள் மேலான கருத்துகளை webmaster@riyadhtamilsangam.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006