எழுத்துக்கூடத்தின் சந்திப்பு |
எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---21 ஒரு பார்வை. - லக்கி ஷாஜஹான் |
எழுத்துக்கூடத்தின் 21 ஆம்
சந்திப்பும் ஒரு இறுதி அஞ்சலியும்
எந்த ஒரு காரியம் அது
சின்னதோ,பெரியதோ அதற்கு ஊக்கபடுத்துவதிலும்,உற்சாகப்படுத்தி
வரவேற்பதிலும் கல்யாண் is a
Great.அவர் மறைந்த நாளின் மறுநாளிலிருந்து அவரைப்பற்றி
இணையத்தில் வந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு பதிவைப் படிக்கையிலும்தான் தெரிகிறது
எத்துணை அருமையான ஒரு நபரை நாம்
இழந்திருக்கிறோம் என்பது...
- எழுத்துக்கூட கூட்டத்தில் மறைந்த நண்பர் கல்யாணின் அஞ்சலி
மற்றும் இரங்கல்கூட்டத்தின் போது சகோதரர் அஹமது இம்தியாஸ்.
*
ஆர்ப்பாட்டமின்றி அமைதியாய் பல சாதனைகள் செய்துகொண்டு அதே
சமயம் தன்னுடைய
அலுவல் பணியையும் சிறப்பாய் செய்து யாருமே எதிர்பார்க்காத
தருணத்தில் நம்மைவிட்டு
சென்ற நண்பர் - ரியாத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்துக்கூடத்திற்கு
வித்திட்ட தமிழ் ஆர்வலன் - ஒன்று விட்ட வெள்ளி தோறும் தமிழ்
ஆர்வலர்களை ஒருங்கிணைத்து எழுத்துக்கூடத்தில் சந்திக்க
வைத்த
சகோதரன் கல்யாண் மறைவை ஒட்டி அவரைப் பற்றிய நினைவு
கூர்தலுக்காகவும்,அஞ்சலி
செலுத்தலுக்காகவும் எழுத்துக்கூடத்தின் இருபத்தோராம்
சந்திப்பான நேற்றைய வெள்ளிக்கிழமை
கூட்டம் நிகழ்த்தப்பட்டது.
நேற்றைய மதியம் 1மணி அளவில் நண்பர் கல்யாணின் உடலை வான்வழி
சரக்ககம் மூலம்
தாயகம் அனுப்பி வைத்துவிட்டு எழுத்துக்கூட கூட்டத்திற்கு
வந்த ஐயா வெற்றிவேல்
ஐயா ஜெயசீலன் இவர்களுடன் எழுத்துக்கூடம் வழமையாக நடைபெறும்
திரு.பாலமுகுந்தன்
அவர்கள் இல்லத்தில் பேரா.மாசிலாமணி
ஐயா,திரு.இம்தியாஸ்,நண்பர்கள் ராஜா,அறவாழி,
திருமாவளவன் ஆகியோர் இந்த எழுத்துக்கூட சந்திப்பை நண்பர்
கல்யாணின் இரங்கல்
கூட்டத் தீர்மானித்திற்காக அமைப்பதென முடிவு செய்து
கூடினோம். வழமையான எழுத்துக்கூட
சாரம்சங்கள் அடுத்த கூட்டத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ரியாத் தமிழ்ச் சங்க வலைத்தளம் வடிவமைக்கப்படுவதில் நண்பர்
கே.வி.ராஜாவுடன் இணைந்து செயல்பட்டதில், தமிழ் ஆர்வலர்களை
படைப்பாளியாக, நல்ல விமர்சகனாக உருவாக்க ஆர்வம்
கொண்டு தற்போதைய எழுத்துக்கூடத்தின் மூல அமைப்பான
எழுத்துப்பட்டறையை ஐயா அப்பாஸ்
இப்ராஹிமுடன் சேர்ந்து வெற்றிவேல் ஐயாவின் ஆலோசனைப்படி
ஏற்படுத்தியவை மட்டுமே
ரியாத்தில் வசிக்கும் கணிணி இணைய உபயோகிப்பாளன் அறிவான்.
அதற்கு அப்பால் சமுத்திர
பிரளயமாய் சாகரன் என்ற புனைபெயரில் உலகளாவிய இணைய
பயன்பாட்டில் தமிழ்
வலைத்தளங்களில் கல்யாண் என்ற கல்யாண ராமனின் பங்களிப்பில்
எதை சொல்வது.. எதை விடுவது...?
எழுத்துச்சித்தர் பாலகுமாரனுக்கென்று உருவாக்கிய
www.balakumaran.
www.muthamilmantram
போன்ற www.thenkoodu.
தேனேகூடு என்ற வலைத்திரட்டி கொஞ்சம் பிரபலமாகத்
தொடங்கியிருக்கிறது.அடுத்து கன்னடம்
மற்றும் மலையாள வலைத்திரட்டி பற்றிய முயற்சியில்
இருந்திருக்கிறார்.குழந்தைகளுக்கென்று
எல்லா அம்சங்களுடனும் கூடிய ஒரு வலைமனை உருவாக்குவது
என்பதும் கல்யாணின் முக்கிய
இலக்குகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.
ஒரு நல்ல எழுத்தாளப் படைப்பாளி என்பதை விட நல்ல
படிப்பாளியாக,வாசிப்பதில் அதீத ஆர்வமுடையவராகவே
இருந்திருக்கிறார்.பல நண்பர்கள் வலைமனை அமைப்பதற்கு
இணையத்தில்
பதிய தம் கணக்கில் இடம் ஒதுக்கித் தந்திருக்கிறார்.அவருடைய
பதிவுகளில் எழுத்துக்களில்
ஒரு பூ மலர்வதான மென்மையும் சுக அனுபவமாய் உணரவைக்கும்
தன்மையும் இருப்பதாக நெகிழ்ந்தபடி நினைவு கூர்ந்தார்
நண்பர் கேவி.ராஜா.
தம்மை வலைப்பூ எழுத ஆர்வப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தன்
பதிவுகளை பாராட்டிப் பிற
இணைய தளங்களுக்கு அவராகவே முன்வந்து அவற்றை அனுப்பி
வைப்பார் என நன்றியோடு நினைவு கூர்ந்தார்
திரு.பாலமுகுந்தன்.எழுத்துக்கூடத்தின் சக உறுப்பினர் அஹமது
சுபைருக்கும் வலைப்பூ எழுத ஊக்கப்படுத்தியது கல்யாண்தான்
என்று ஒருமுறை சொல்லியிருந்ததை நண்பர்
ஃபகுருதீன் தம்
வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கிறார்.
கல்யாணின் இழப்பு என்பதை இன்னும் நம்பமுடியாததாகவே
கருதுவதாக சொன்ன பேரா.மாசிலாமணி ஐயா தாம்
எழுத்துக்கூடத்தில் உரையாற்றி வரும் தாக்கத்தை ஏற்படுத்திய
தமிழர்கள் என்ற தொடரை புத்தகமாக வெளியேற்று அந்தப்
புத்தகத்தை கல்யாண் பெயரில்
அர்ப்பணித்து அதில் வரும் தொகையைக் கொண்டு இங்கு ரியாத்தில்
கல்யாண் பெயரில் ஒரு
புரவல அமைப்பை ஏற்படுத்த கேட்டுக் கொண்டார்.கல்வி மற்றும்
சமூக நல காரியங்களுக்கு
உதவக்கூடிய வகையில் அந்த தொகைப் பயன்படுத்தப்படும் என்ற
அவரின் கருத்து எல்லோராலும்
ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இங்கு இலக்கியப் படைப்புத்
தொடர்பாக தரும் பரிசுகளோடு
கல்யாண் விருது ஒன்றும் ஏற்படுத்தலாம் என்ற எல்லோருடைய
கருத்தும் பரிசீலிக்கப் பட
இருக்கிறது.இறையருளால் அடுத்தடுத்த கூட்டங்களில் இதுபற்றி
முடிவு எடுக்கப்படும்.
ரியாத்தில் கல்யாணைப் பற்றி அறிந்த அனைவரும் பங்கேற்கும்படி
ஒரு இரங்கல் கூட்டம் இன்னும் ஓரிருநாளில்
நடத்தப்படும்.அமைப்புகள் ரீதியாக,நண்பர்கள் ரீதியாக,அவரது
சகபணியாளர்கள் - அலுவலகப் பெருமக்கள் ரீதியாக அனைவரும்
ஒன்று கூடி நடத்த இருக்கும்
இக்கூட்டம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெற்றிவேல் ஐயா
வெளியிடுவார்கள்.இதற்கான முயற்சிகள் தீவிரமாக நடக்க
கேட்டுக் கொண்டு நிறைவாக இனிய நண்பர்-எழுத்துக்கூட
கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மறைந்த சகோதரர் கல்யாணுக்காக
மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
எழுத்துக்கூடம் அமைப்பதில் ஆர்வம் காட்டியது, அதை ஒரு
வருடம் ஒருங்கிணைத்து நடத்திச் சென்றது என்பதில் கல்யாண்
காட்டிய அக்கறை குறிப்பிடத்தக்கது.ரியாத் தமிழ்ச்சங்கத்தில்
இதுவரை உள்ளவர்களும் இனிவர இருப்பவர்களும் இதைக் கவனத்தில்
கொண்டு இந்த எழுத்துக்கூட சந்திப்புகள் இடையறாது தொடர
முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
வாழ்ந்து நிற்றல் என்பது சாகாதிருத்தல் அல்ல, பேர்
நிலைக்கச் செய்தல். தாஜ்மஹாலும் தஞ்சை
பெரிய கோவிலும் எப்போதெல்லாம் பேசப்படுகிறதோ அப்போதெல்லாம்
ஷாஜஹானும் ராஜராஜ
சோழனும் பேசப்படுகிறார்கள்.அதுதான் பேர்நிற்றல் என்பது.
முப்பதுக்கும் நாப்பதுக்கும் நடுவில்
சாதித்த தமிழர் பட்டியலை விரல்விட்டு எண்ணி விடலாம்.அந்த
எண்ணிக்கைக்குள் ஒன்றாக கல்யாணும் பேசப்பட வேண்டும் -அவரது
தமிழ் சேவைகளுக்காக...
ஒரு நல்ல தமிழ் உறவை - உடன் பிறவா சகோதரனை இழந்ததில்
வருத்தமுடனும் - கண்ணீருடனும்
லக்கி ஷாஜஹான்.
|
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!! |
. |