எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---22  ஒரு பார்வை.

                 - லக்கி ஷாஜஹான்

எழுத்துக்கூடத்தின் 22 ஆம் சந்திப்பு
-
லக்கி ஷாஜஹான்

----------------------------

உறவு இரண்டு வகைப்பட்டது

.ஒன்று பாலில் ஒரு சொட்டுத் தயிரை விட்டதும் மொத்தப் பாலும் தயிராவது போல் ,ஒரு உறவின் வழியாக எல்லா உறவுகளும் ஒன்றுக்குள் ஒன்று ஐக்கியமாகிவிடுவது. மற்றது பாலில் ஒரு சொட்டு உப்பு கலந்து விடுவது போல அது மொத்தப் பாலையும் திரியச் செய்து விடும் .

"

உறவிலே வேகிறதை விட ஒரு கட்டு விறகிலே வேகலாம்" என்று ஒரு சொலவடை இருக்கிறது. வாழ்வுக்கு வலு சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் எல்லா உறவுகளும்.அது கலையாவதோ சுயநலமாவதோ எப்போதும் சரியானதல்ல ...

- 02 - 03 - 2007

எழுத்துக்கூட நிகழ்வின் கதாவிலாசப் பார்வையிலிருந்து...

*

நண்பர் கல்யாண் மறைவிற்குப்பிறகு நண்பர் ராஜா எழுத்துக்கூடத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மடலாற்குழுவில் அறிவித்தபடி மீண்டும் எழுத்துக்கூட நிகழ்வுகள்

02-03-2007 அன்று நண்பர் திரு.பாலமுகுந்தன் வீட்டில் சென்ற சந்திப்பு நிகழ்ந்தது. பரிகாரம் என்ற தலைப்பினை ஒட்டிய எஸ் .ராவின் இந்த வாரப் பார்வையில் எழுத்தாளர் பாவண்ணன் பற்றிய அறிமுகத்துடன் அவரது சிறுகதை ஒன்றையும் தம் வழக்கமான புனைவுக்கு துணையாக்கிக் கொண்டு விவரித்திருந்த பதிவு நண்பர் சுபைரால் வாசிக்கப்பட்டது .

கோவிலுக்கு வழக்கமாய் வரும் பெண்மணி ஒருவர் அந்த கோவிலில் உள்ள யானையை

நேசிக்கும் பார்வையிலிருந்து தொடங்குகிறது எஸ் .ராவின் பார்வை.அந்தப் பெண்மணியின் நேசத்தைப் புரிந்து கொள்ளும் அந்த யானை அவர் பொருட்டு அவரை விட்டு விலகிச் சென்ற அவரது கணவர் தம் அடுத்த வாழ்க்கைத் துணையுடன் கோவிலுக்கு வரும்போது ஆசிர்வதிக்க மறுக்கும் யானையின் குணாதிசயத்திலிருந்து புறக்கணிப்பு பற்றிய தன் பார்வையை விவரிக்கிறார் எஸ் .ரா.

பெண்கள் வாழ்நாள் முழுவதும் படகின் இரண்டு துடுப்பைப் போல் பிறந்த வீடு புகுந்த வீடுஎன்ற வீடுகளுக்குள் ஊசலாடுகிறார்கள்

( தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம் தானே - என்ற கவிப்பேரரசுவின் வார்த்தைகள் நினைவாடலில் )அதிலும் பெண்ணின் வாழ்வும் தாழ்வும் அவள் திருமணத்தைச் சுற்றித்தான் பின்னப்பட்டிருக்கிறது .வீட்டு நாய்கள் கூட பழகிய இடங்களை,மனிதர்களை விட்டுப் பிரிந்து போக இயலாமல் தத்தளிக்கும் போது பெண் மட்டும் கண்ணை மூடிக்கொண்டு யாவையும் மறந்து இன்னொரு இடத்தில் வாழ வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டிருக்கிறது .

பெண்களின் அகவுலகச் சிக்கல்கள் குறித்து கூர்ந்த அக்கறை கொண்ட

, சிறந்த தமிழ்ச்சிறுகதை ஆசிரியர்களில் ஒருவரான பாவண்ணனின் 'அடி' என்ற சிறுகதையை எஸ். ரா அறிமுகப்படுத்துகிறார்.

அவரது இந்த சிறுகதை புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் துயரக்குரலை ஆழமாகப் பதிவு

செய்திருக்கிறது .திருமணமாகி விலக்கி வைக்கப்பட்ட ஒரு பெண் மீண்டும் தம் கணவனைத் தேடி வந்து சண்டைகள் செய்து அடிவாங்கிப் போகும் நிலைப்பாடை சொல்லும் கதை. ஒருமுறை அப்படி பார்க்க வருகையில் அடிவாங்கி அழுவும் பெண் தம் கணவனை பார்க்க வேண்டும் போல் இருந்ததாகவும் அதற்காக வந்ததாகவும் விளக்கும் இடங்களில் நம் மனதுள்ளேயே மெல்லிய ஊசியொன்று அழுத்தமாய் இறங்குவது போல் ஒரு வேதனை படர்கிறது .பச்சை மரங்களில் விழுந்த வெட்டுபோல் இந்த கதை படிக்கும் அனைவர் மனதிலும் ஆழமான வடுவை உருவாக்கி விடக்கூடியது .

திருமணமாகி சேர்ந்து வாழப்பிடிக்காமல் விலக்கி வைக்கப்பட்டவன்

என்று எவரேனும் ஒரு ஆண் இருக்கிறானா என்று கேட்கிறார் எஸ் . ரா.புறக்கணிப்பு என்ற அகல கைகளின் உக்கிரத்துக்குப் பயந்துதான் பெரும்பான்மையான பெண்கள் ழ்கிறார்கள் .புறக்கணிக்கப்பட்ட பெண்களின் வாழ்வு வேதனைகளும் முணுமுணுப்புகளும் நிரம்பியது என்பதைத் தான் பாவண்ணனின் இந்த சிறுகதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது .

பாவண்ணன் ஒரு நல்ல படைப்பாளர் என்பது அவரின் பிற கதை

,கட்டுரைகளை படிக்க நேர்கையில் தெளிவாக அறியமுடிகிறது . நான் இந்த எழுத்துக்கூட சந்திப்பைப் பற்றி எழுத பாவண்ணனை கூகிளில் தேடினேன் .அவருடைய படைப்புகள் பற்றி ஏராளம் இணையமெங்கும் பரவிக்கிடக்கிறது. திண்ணைத் தளத்தில் கூட ஏராளமாய் எழுதியிருக்கிறார்.தினமணி செய்தித்தாளில் அவர் எழுதிய கட்டுரைகள் மிக நேர்த்தியானதொரு சமூக அக்கறையுள்ளவராக அவரை அடையாளம் காட்டுகிறது .அந்தக் கட்டுரைகள் தொகுப்பாக வந்திருக்கிறது என்பதையும் அறிய நேர்ந்தேன். ஒரு நல்ல விமர்சகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

----------------------------

தாக்கம் தந்த தமிழர்கள் தொடரில் ஐயா பேரா

.மாசிலாமணி இந்த முறை எடுத்தாண்டது

இளங்கோ அடிகளை

. இளங்கோ அடிகள் தந்த சிலப்பதிகாரத்துக்காக... தமிழ் உலகறிந்த சிலப்பதிகாரம் பற்றி பலமுறை பல நிகழ்வுகளில் கலந்துரையாடியிருந்தாலும் ஐயா அவர்கள் தாக்கம் தந்த தமிழர்கள் பற்றிய தலைப்புக்கான ஆய்வுக்காக வைத்த விவாத கோணங்கள் முற்றிலும் புதியவை . ( ஏற்கனவே சென்றுவிட்ட எழுத்துக்கூட நிகழ்வுகளில் தமிழ் ஆர்வலர் ஐயா.நாக இளங்கோவன் சிலப்பதிகாரம் பற்றிய தம் சிலம்பு மடல் நூல் வழியாக எழுத்துக்கூடத்தில் அதுபற்றி சுவைப்பட தொடராற்றியது குறிப்பிடத்தக்க விஷயம் ).இம்முறை மாசிலாமணி ஐயா ஏன் தாம் அதை தம் சிறந்த 10 வரிசையில் கொண்டுவந்தது என்பதற்கான குறிப்புகளை விளக்கினார் .அவற்றில் நினைவில் உள்ள ஒருசில மட்டும் இங்கு.. அடைப்புக்குறிக்குள் இருப்பது அடியேனின் சரக்கு

*

இளங்கோவடிகள் அரசனாகும் வாய்ப்புடையவராய் இருந்தும் துறவியானவர். துறவியாய் இருந்து இலக்கியம் செய்தவர் . இலக்கியத்தை வெற்றிப் பெறச் செய்ததன் மூலம் பிரபலமானவர் .அரசனாக இருந்து அரசர்களின் வரலாறுகளை பதிவு செய்யாமல் ஒரு குடிமகனின் வாழ்க்கையை இலக்கியமாக்கியவர் .இதன் மூலம் அரச சாம்ராஜ்யங்களில் வாரிசுகளில் இவர் தனித்தன்மை பெறுகிறார்.

*

தமிழின் முதல் பின்னோக்கிய மின்னிடும் நிகழ்வு (Flashback) படைப்புக் காப்பியம்.( காலம் இரண்டாம் நூற்றாண்டு என அறிக ) இளங்கோவடிகளின் கேட்டறிதல் பார்வையிலிருந்து தொடங்குகிறது .கண்ணகியின் கடைசிக்கட்ட நிகழ்வைக் கண்ட மலைவாழ் மக்கள் அதுபற்றி விபரம் கேட்கப் போக அங்கிருந்து கதை சொல்லும் உக்தி . இது காப்பிய நிகழ்வுகளில் சிலப்பதிகாரம் தவிர ஏதுமில்லை. ( தமிழ் சினிமாவில் கொசுவர்த்தி சுழற்றும் உக்திக்கு முன்னோடி ..?)

*

மன்னரிடமே போய் மன்னரைப் பற்றி வழக்குரைக்கும் நாயகி.தமிழ்க் காப்பியங்களில் இது கொஞ்சம் புரட்சிப்பாத்திரமாய் அறிமுகம் . புதுமையும் கூட (ஆராய்ச்சி செய்யாமல் அநீதம் வழங்கிய மன்னா   ( தே(றாத)ரா மன்னா ) என கை நீட்டி பேசும் கதாநாயகி.. )

*

தேர்ந்தெடுக்கப் பட்ட சில கதாபாத்திரங்களைக் கொண்டே நகரும் கதைக்களம்.( ஒரு சீன் வரும் மாதரிக்கு கூட ஒரு முக்கியப் பாத்திரம் )

*

மன்னரை விட எல்லாவற்றிலும் அதீதமாய் குறைவற சித்தரிக்கப்படும் கதாநாயக- நாயகி ,அவர்கள் பாரம்பர்யம்.பழைய காப்பியங்கள் என்று எடுத்துக் கொண்டால் அரசன் தான் எல்லாம்.. அரசனுக்குப் பின் தான் எல்லாம். அந்த கருத்தமைவை உடைத்தெரிந்த உக்தி.. ( ரஜினி படத்தில் ரஜினி மட்டுமே தெரிவார்... சந்திரமுகி கொஞ்சம் விதிவிலக்காய்..)

*

காட்சிகள் சரேலென்று மா(ற்)றுகின்ற வீதம் - இருபொருள் பட பாடியதில் சேர்த்துக் கொண்டதை விலக்கிவிட்டு மனம் திருந்தி மனையாளிடம் திரும்பி.நகர் நோக்கி நகர்வதில் விதியும் சேர்ந்து பயணிக்க - அந்தப்புரத்தில் ஆட்டம் பார்த்து சிலாகித்திருந்த மன்னனிடம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு போன மகாராணி -அந்த நேரம் வந்து பொற்கொல்லன் போட்ட 'பிட்டில்' மூட் -அவுட்டில் தீர்ப்பு வழங்கிய மன்னன். இவர்களை இவர்கள் இயல்புடனே மிகைபடுத்தாது கனகச்சிதமாய் செய்திருக்கும் என்று இளங்கோஅடிகள்ஆங்காங்கே அழுத்தமான முத்திரைகளை பதித்திருக்கிறார் .

விட்டுப்போன அதிமுக்கிய காரண விளக்கங்கள் பின் வெளியிடப்படும் நூலில் விரிவாக இருக்கும்

. (நான் கொஞ்சம் ட்ரைலர் மட்டும்தான் காமிச்சிருக்கேன் ).

இந்த நிகழ்வில் பெரிதும் குறையாக இருந்தது சிலம்புக்கு மடல் வரைந்த ஐயா நாக

.இளங்கோவன் இந்த கூட்டத்தில் இடம்பெறாமல் போனதுதான் . இன்னும் ஏ.......ப்பட்ட விஷயங்களை உள்வாங்கியிருக்க இயலும் .( ஐயா பணி நிமித்தம் பஹ்ரைன் போயிருந்தது பின்னர்தான் தெரிய வந்தது.).

நண்பர் ராஜாவும் முக்கிய பணி நிமித்தமாக வர இயலாததால் அவருடைய யாப்பிலக்கண

- வெண்பா வகுப்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை .இறை நாடினால் வரும் சந்திப்புகளில் இருந்து வகுப்புகள் வழக்கம் போல் தொடரும் .மரபுக்கவிதை எழுத ஆர்வமுள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த வகுப்புகள் ...

அப்புறம் ஒரு முக்கிய அறிவிப்பு நண்பர்களே

..

வரும் வார எழுத்துக்கூட நிகழ்விலிருந்து இன்னொரு புதிய அம்சமும் எழுத்துக்கூடத்தில்

சேர்க்கப்படுகிறது

.கதாவிலாசப் பார்வை, தாக்கம் தந்த தமிழர்கள் ,வெண்பா மரபுக்கவிதை கற்றுத் தரும் பயிற்சி என்ற வரிசையில் இன்னொரு தலைப்பும் தொடங்க இருக்கிறது. எழுத்துக்கூட நிகழ்வுக்கு என்று பிரதானமாய் எந்த அழைப்பும் இல்லை. தமிழ் ஆர்வலர்கள் ,வெள்ளிக்கிழமையின் மதியத்தில் ஒரு இரண்டு மணி நேரம் ஒதுக்கும் வசதி உள்ளவர்கள் அனைவருமே கலந்துக் கொள்ளலாம்.எந்தக் கட்டுப்பாடும் இல்லை .கட்டணமும் இல்லை. ஆர்வமுள்ள அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம் .

.

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.