எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---32  ஒரு பார்வை.

--.மலர் சபாபதி

எழுத்துக்கூடத்தின் 32 ஆம் கூட்டம் - ஒரு பார்வை
 

----.மலர் சபாபதி

========================

 16 நவம்பர் 2007

எழுத்துக்கூடத்தின் 32 வது சந்திப்பு - ஒரு பார்வை

இடம்: திரு. பாலமுகுந்தன் அவர்கள் இல்லம்


முதலில் கதாவிலாசம்: குருதிக்கடன் என்ற பதிவு இந்த வாரம் எடுத்துக்கொள்ளப்பட்டது...மருத்துவத்துறை சேவை மனப்பான்மையிலிருந்து விலகி எவ்வாறு வியாபாரம் ஆகியிருக்கிறது என்பதை நயம்பட எடுத்துரைக்கும் பதிவு...இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளர் திரு.சுஜாதா...
அவரின் நகரம் என்ற சிறுகதை மருத்துவமனைகளில் ஏழைகள் எவ்வாறு அலட்சியம் செய்யப்படுகிறார்கள் என்பதை விவரித்தது...



கலந்துரையாடல்: பணம் கொடுத்துப் படிப்பதால் மருத்துவர்கள் அதைத் திரும்பப் பெற அதை வியாபாரமாக்கிவிட்டார்கள், இன்னும் சேவை மனப்பான்மையில் குறைந்த கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளும் இருக்கத்தான் செய்கின்றன, பலதுறைகளைப் போல மருத்துவத்துறையும் மரியாதைத் தரத்தில் சற்று இறங்கி இன்று கேலிக்குரியதாகிவிட்டது...மற்றும் இது குறித்த திரு.& திருமதி பாலமுகுந்தன், திரு. வெற்றிவேல், திரு.இளங்கோவன் அவர்களின் சொந்த, சுவாரசியமான அனுபவங்கள்...



அடுத்ததாக திரு. பாலமுகுந்தன் அவர்களின் திட்ட மேலாண்மை பற்றிய தொடரின் இரண்டாவது பகுதி அரங்கேறியது..போன பகுதியைப் போலவே ஒலிப்பதிவில் வழங்கினார்...முனையல் மேலாண்மை (Project: தமிழ்ப்பதம் "முனையல்" உபயம்: திரு. இராம.கி, அறிமுகம் செய்தவர்:திரு. இளங்கோவன்) முனையல் மேலாண்மை குறித்த திருக்குறள்களைச் சென்ற பகுதியில் தந்து அசத்தியவர்...இந்தப் பகுதியில் அதன் நிலைகளை விவரிக்கையில்... நிலைகள் குறித்த திரைப்படப் பாடல்வரிகளை(எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா, காதலின் நிலைகள் ஏழு) ஒலிப்பதிவின் இடையில் செருகி அசத்தினார். போன பகுதியைப் போலவே முனையல் மேலாண்மை நிலைகள் குறித்து விளக்கமாகப் புரியும் வண்ணம் திருமணம் என்ற முனையலின் நிலைகளை எடுத்துக்காட்டாகக் கையாண்டிருந்தது ஒரு சிறப்பு அம்சம்...எளிதில் அனவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்திருந்த அழகான நடை....

பேராசிரியர் திரு. மாசிலாமணி, திரு.வெற்றிவேல், திரு.இளங்கோவன் மற்றும் அனைவரும் திரு. பாலமுகுந்தன் அவர்களுக்குப் பாராட்டுகளும் ஆலோசனைகளும் வழங்கினார்கள்.

திருமதி. பாலமுகுந்தனின் தேநீர் உபசரிப்புடன் கூட்டம் இனிது முடிவடைந்தது...


அடுத்த சந்திப்பு: 07.12.2007 மதியம் 3.30 - 5.30


 

 

.

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.