எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---37  ஒரு பார்வை.

--.மலர் சபாபதி

எழுத்துக்கூடத்தின் 37 ஆம் கூட்டம் - ஒரு பார்வை
 

----.மலர் சபாபதி

========================

 07 மார்ச் 08

எழுத்துக்கூடத்தின் 37 வது சந்திப்பு - ஒரு பார்வை

இடம்: திரு. பாலமுகுந்தன் அவர்கள் இல்லம்


திரு. பாலமுகுந்தன் மற்றும் திருமதி ஜெயந்தி பாலமுகுந்தன்..இருவரும் இணைந்து இராமாயணத்தின் "சுந்தர காண்டம்" பகுதிக்குத் தம் குரலால் மெருகூட்டி வாசித்த குறுந்தகடு ஒலிபரப்பப்பட்டது. கேட்பதற்கு இனிமையான முறையில் சிறந்த பாவங்கள் மற்றும் உச்சரிப்பு நயம்..இதைக் கேட்டு மகிழ்ந்தது ஓர் இனிமையான அனுபவம்.


இதைக் கேட்டதும் அனைவருக்கும் பல யோசனைகள் வந்தன. பேராசிரியர் மாசிலாமணி அவர்கள் , புதுமைப்பித்தன் சிறுகதைகளையும் இவ்வாறே ஒலிவடிவில் கேட்கும்படி ஏற்பாடுகள் செய்யலாம் என்ற ஆலோசனை வழங்கினார். திரு. பாலமுகுந்தன் அவர்களும் இலக்கியப் படைப்புகள் பலவற்றையும் ஒலிவடிவில் கேட்டு ரசிக்கும் வண்ணம் நம் எழுத்துக்கூடம் மூலம் ஏற்பாடு செய்யலாம்என்றும் கூற திரு. வெற்றிவேல், திரு. இளங்கோவன் மற்றும் திரு. பக்ருதீனும் இந்த ஆலோசனைகளை வரவேற்றனர்.


வரும் வாரங்களில் நவீன கவிதைகள் பற்றிய பக்ருதீனின் உரைகள், ஒலிவடிவில் இலக்கியப் படைப்பு குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
 

 

.

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.