========================
02 மே 2008
எழுத்துக்கூடத்தின் 40 வது சந்திப்பு - ஒரு
பார்வை
பாவேந்தர் நினைவேந்தும் கருத்தரங்கம்:
எழுத்துக்கூடம். இரியாத்.
நாள்: 02 மே 2008
நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை.
இடம்: இந்தியத் தூதர் இல்லம், தூதரக வளாகம்
திரு.வெற்றிவேல் அவர்கள் தன் வரவேற்பு உரையில்
பாரதிதாசன் விழா கொண்டாட வேண்டிய
முக்கியத்துவத்தையும். பாரதிதாசன் புகழ் பரப்ப
பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் நடத்திய மேதகு
இந்திய தூதர் தலைமையில் இந்த விழா நடப்பது
சிறப்பு என்பதையும், இணையத்தில் பாரதிதாசன்
விழா கொண்டாடிவரும் திரு நாக இளங்கோவன் அவர்கள்
இந்த விழாவை நடத்த இருப்பதையும் தெரிவித்தார்.
திரு நாக இளங்கோவன் பொறுப்பேற்று தமிழ்த்தாய்
வாழ்த்து பாடி, புதுவையில் தமிழ்த்தாய்
வாழ்த்தாக இருக்கும் பாவேந்தரின் பாடலையும்
பாடினார்.
மேதகு இந்தியத் தூதர் பாவேந்தர் படத்திற்கு
மாலை அணிவித்தார்
இதன் பிறகு திரு நாக இளஙோவன் தமிழாரம் உமக்கே
என்ற கவிமாலையை இசையோடு ஒலிப்பதிவு செய்து
கொணர்ந்து ஒலிக்கச்செய்து பாடினார்.
திரு.சாசகான் - பாவேந்தர் படைப்புகளில் காதல்
நயம் பற்றி நயம்பட பரிமாறினார்.
திரு.பகுருதீன் - பாவேந்தர் சிறப்புகள் பற்றிய
உரையும் பாவேந்தர் புகழ் பாமாலையும் பாடினார்.
திரு.கே.வி.இராசா வரமுடியாவிட்டாலும் அவர்
சார்பாக திரு நாக இளங்கோவன் பாவேந்தர் காட்டும்
பகுத்தறிவு பற்றி எடுத்தியம்பினார்
திரு.பாலமுகுந்தன் பாவேந்தர் புகழ் மாலையை
ஒலிப்பதிவோடு பாடினார்.
திரு.இரா.சுவாமிநாதன் - தொழிலாளரின் தோழர்
பாவேந்தர் என்று விளக்கினார்.
பேராசிரியர் திரு.மாசிலாமணி - பாவேந்தரின்
குடும்ப விளக்கு பற்றி வருணித்தார்.
அதன் பின்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
இறுதியாக பேராசிரியர் மாசிலாமணி அவர்கள்
தொகுப்புரை வழங்கினார்.
தொடர்ந்து மேதகு இந்தியத் தூதர் அவர்கள்
பாவேந்தர் பற்றிய சிறப்புரையாற்றினார்
திரு.செயசீலன் அவர்களின் நன்றியுரை கூறினார்
இந்திய தேசப் பண்ணுடன் விழா இனிதே முடிவடைந்தது.